தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார். இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கௌதம் மேனன் மீண்டும் தற்போது மம்மூட்டியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கெளதம் மேனன் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தை 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாததால் அப்பிடத்திலிருந்து சூர்யா விலகினார். பிறகு ரஜினியிடம் கதையை கூறிய நிலையில் அவரும் அடிக்கவில்லை. பிறகு விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு 2016 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில தடைகளால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்து விட்டனர்.
ரிலீஸ் செய்வதிலும் பல சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய வலைப்பேச்சு அந்தணன், துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் தாமதமாவது குறித்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் வலிகள் யாருக்கும் தெரியாது. ஒரு வரியை எழுதுவது எளிது தான் ஆனால் அந்த வரியை படமாக மாற்றுவது என்பது சிரமம். அதற்குப் பின்னால் இருக்கும் செலவு மற்றும் உழைப்புகளை நாம் கவனிக்க வேண்டும். துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் ரொம்பவே இரவு பகலாக கஷ்டப்பட்டார். அந்தப் படத்தில் பல லட்சம் ரூபாய் பணம் முடங்கி கிடக்கிறது.
அந்தக் கடன்களை அடைப்பதற்காக தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக கௌதம் மேனன் அதிலிருந்து மீண்டு வந்தார். படம் ரிலீஸ் செய்ய இறுதி கட்டம் வரை வந்தோம் சில சிக்கல்களை சந்தித்தார். அவரால் அதனை சரி செய்ய முடியவில்லை. தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பல சங்கங்கள் கௌதம் மேனனின் நிலைமையை புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்தனர். படம் பார்த்த அனைவருமே பாராட்டிவிட்டு இந்த படம் ரிலீஸ் ஆனால் கட்டாயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என பாராட்டினர். ஆனால் கௌதம் மேனனால் சிக்கல்களை சரி செய்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இருந்தாலும் விரைவில் படத்தை ரிலீஸ் செய்து அதில் வரும் லாபத்தை பிரித்து அனைவரும் தங்கள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளுங்கள் என்று முடிவுக்கு கூட வரலாம் என அந்தணன் கூறியுள்ளார்.