தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் அறிமுக இயக்குனருக்கான சைமா விருதினை பெற்றார். அதுமட்டுமல்லாமல நல்ல திரைக்கதைக்கான விகடன் குழுமத்தின் விகடன் அவார்ட்ஸ் என்னும் விருதையும் பெற்றார்.
சிறந்த திரைக்கதைக்கான விஜய் அவார்ட்ஸ்யும் பெற்றார். மேலும் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட இவருடைய இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜின் தந்தை ஒரு நடிகர் என்பது பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரின் பெயர் நடிகர் கஜராஜ். ‘ ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மட்டுமல்ல, முண்டாசுப்பட்டி, பேட்ட, ராட்சசன், கபாலி, இறைவி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. ஜனவரி 5-ஆம்…
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை…
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கான' பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.…
இத்தாலியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் சேர்ந்த ஜோதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச் சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள…