விஜய் சொன்னதுல என்ன தப்பு இருக்கு…? நானே முதல்வர் மு.க.ஸ்டாலினை…. விஜய்க்காக வரிந்து கட்டி பேசிய கே.எஸ் ரவிக்குமார்…!!

By Devi Ramu on ஆவணி 28, 2025

Spread the love

விஜய் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என கூப்பிட்டதில் தவறு கிடையாது. நிஜமாகவே நேரில் பார்க்கும்போது குட் மார்னிங் அங்கிள் எப்படி இருக்கீங்க? என்று தான் விஜய் நலம் விசாரிப்பார். இப்போது மக்கள் மத்தியில் அதை கூறி இருக்கிறார். எப்போதும் போல விஜய் அங்கிள் என அழைத்ததை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு வேறு மாதிரியாக பேசுகிறார்கள்.

   

நாட்டுக்கு என்ன நல்லதோ அதைத்தான் செய்ய வேண்டும். நானே ரெட் ஜெயன்ஸ் தயாரிப்பில் படம் காலத்தில் அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலின் சாரை அவரது வீட்டில் சந்திக்கும்போது அங்கிள் என்றுதான் கூறினேன். அங்கிள் என அழைப்பதில் என்ன தவறு உள்ளது என கே எஸ் ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.