சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, செந்திலை மத்தவங்க ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு ரொம்ப பாவமாக இருக்கும். நாடக நடிகர்கள் எல்லாம் சுத்தி உட்கார்ந்துட்டு இந்த செந்திலை தான் ரொம்ப விரட்டுவாங்க. டேய் கருமா இங்க வாடா, சொட்டையா இங்க வாடா என்று கூப்பிட்டு போய் டீ வாங்கீட்டு வா காப்பி வாங்கீட்டு வா என்று எடுபிடி ஆளாக வைத்திருந்தார்கள்.
அவர்களே நாடக நடிகர்கள்தான். பெரிய வசதியானவர்கள் இல்லை. அவர்களே செந்திலை எடுபிடி ஆளாக பாடாய்படுத்துவார்கள். பாவம்யா இந்த ஆளு என்று செந்திலை பார்த்து அப்போது பரிதாபப்படுவேன். நமக்கு சினிமாவில் வாய்ப்பு வரும்போது செந்திலுக்கு எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு தரணும் என்று மனசுல நெனைச்சுக்கிட்டேன்.
அப்புறம்தான் மௌன கீதங்கள், தூறல் நின்னு போச்சு படங்களில் செந்திலை நடிக்க வெச்சேன். அப்போ டயலாக் பேசி நடிக்கும் போது செந்தில் அழுதுட்டான். அதுவும் தூறல் நின்னு போச்சு படத்துல நடிகர் நம்பியார் கூட அவர் அசிஸ்டென்ட் மாதிரி நடிக்கிறதை நெனைச்சு நெனைச்சு 2 நாளைக்கு ஒரு தடவை அழுவான். நான் நெனைச்சே பார்க்கலைணே என்கிட்ட சொல்லி சொல்லி அழுவான் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…