தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர் அடுத்து நடிகர் விக்ரம்மை வைத்து இயக்கிய “சாமி” திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக மாறினார்.அதனை தொடர்ந்து “ஆறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சிங்கம்” என அதிரிபுதிரியான பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் ஹரி. இவரது திரைப்படங்களில் திரைக்கதை விறுவிறுவென செல்லும். இது இவரது தனித்துவமான பாணியாக ஆகிப்போனது. அதே போல் இவரது திரைப்படங்களில் வசனங்கள் அனைத்தும் அனல் பறக்கும்.

அதே போல இவரின் படங்களின் கதாநாயகனாகவோ அல்லது ஒரு ரௌடியாகவோதான் இருப்பான். ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படி தனது கதைக்களத்தை வடிவமைத்துக் கொள்வார் ஹரி.தமிழ் சினிமாவில் பிரசாந்த், விக்ரம், சூர்யா, விஷால், பரத், தனுஷ் மற்றும் அருண் விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஹரி. இடையில் அவர் இயக்கிய பூஜை மற்றும் யானை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இறுதியாக அவரின் ரத்னம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படியான நிலையில் இயக்குனர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டியில், தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற “தாலியும் தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி” பாட்டு உண்மையிலேயே முதலில் சரத்குமார் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்திற்கு எழுதிய பாட்டு தான். ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் பாட்டுக்காக நான் தமிழ் லிரிக்ஸ் எழுதும்போது தாலி கட்ட தேவையில்லை நீ தான் எனக்கு பொண்டாட்டி என்ற லைனை அந்த பாட்டில் வச்சிருந்தேன்.

ஆனா இந்த லைன் அந்த படத்துக்கு யூஸ் ஆகல. அடுத்து தாமிரபரணி திரைப்படத்துக்காக யுவன் சார் கூட நான் உட்காரும்போது ஐயா படத்தின் ஒரு வார்த்தை கேட்க பாடல் மாதிரி இந்த படத்தில் ஒரு பாட்டு வேணும் என்று அவர் கேட்க நானும் அசால்டா ஒரு பத்து லைனா அவர்கிட்ட காட்டுன. அதுல கடைசியா இருந்த இந்த வார்த்தையை வச்சுக்கிட்டு தான் தாலியும் தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி பாட்டு வந்துச்சு என்று இயக்குனர் ஹரி பகிர்ந்துள்ளார்.
