என்கிட்ட 2.30 மணி நேரம் கதையை கேட்டுட்டு விஜய் நோ சொல்லிட்டாரு.. இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்த சம்பவம்..!

By Nanthini on தை 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார். இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர்.

வெற்றி மாறனுடன் கைகோர்க்கும் கௌதம் மேனன்! | nakkheeran

   

இவருடைய இயக்கத்தில் 15 வருடங்களுக்கு முன்பு திரைப்படம் உருவாக இருந்த திரைப்படம் தான் யோகன். இந்த படம் குறித்த செய்திகள் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கைகூடவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக அண்மையில் பேட்டி அளித்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய்யிடம் யோகன் படத்தின் கதையை 2.30 மணி நேரம் விவரித்தேன்.

   

Gautham Menon - விஜய் ஓகே சொன்னால் ஷூட்டிங் போயிடலாம்.. மனம் திறந்த கௌதம்  மேனன் | Gautham Menon Talks about Vijay And Yogan Athiyayam ondru Movie -  Tamil Filmibeat

 

அதனைக் கேட்டுவிட்டு விஜய், இது ஆங்கில படம் போல இருக்கிறது. இங்கே இது சரியாக வருமா என தெரியவில்லை. அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை நடிகையாக தேர்வு செய்து உள்ளீர்கள். தமிழ் படம் மாதிரி தெரியவில்லையே என கூறினார். ஆனால் என்னை பொறுத்தவரை இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். இன்று அவர் செய்யும் படத்தை தான் நான் 12 வருடங்களுக்கு முன்பு சொன்னேன். அது ஒரு இன்டர்நேஷனல் படமாக அமைந்திருக்கும். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தை இயக்க முடியவில்லை என்று கௌதம் மேனன் கூறியுள்ளார்.