இந்த வருடம் தல பொங்கல் கொண்டாடிய பிரபலங்கள் யாரெல்லாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி காதலித்து வந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில் ஒன்றில் செப்டம்பர் 16ஆம் தேதி பாரம்பரிய முறையில் திருமணம் முடித்துள்ளனர். இவர்களும் இந்த வருடம் தலை பொங்கல் கொண்டாடியுள்ளனர்.

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கும் இந்த ஆண்டு தலை பொங்கல் கொண்டாடியுள்ளனர்.

நாக சைதன்யா நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பின்னர் சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கும் இந்த வருடம் தல பொங்கல் தான்.

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் நண்பனான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

15 வருடமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் இவர்களுக்கும் தல பொங்கல் தான்.

சீரியல் நடிகரான அஸ்வத் தனது காதலியான சீரியல் நடிகர் கண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் இந்த வருடம் தல பொங்கல் தான். இதனால் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் அவருடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த வருடம் தல போன்களை கொண்டாடியுள்ளனர்.
