Categories: சினிமா

சூர்யா யோசித்து இருக்கவே கூடாது.. 2 சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை அவர் நம்பல.. கௌதம் மேனன் ஆதங்கம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்று பெயர் பெற்ற கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய முதல் படமான மின்னலே படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் தனது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது சினிமாக்களுக்கு என தனி அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக டாம்னிக் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மம்முட்டி நடித்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் கௌதமேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சூர்யா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இவருடைய 44 ஆவது படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரெட்ரோ என பட குழு பெயரிட்டுள்ளது. இந்த நிலையில் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் சூர்யா மீது பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், சூர்யாவிடம் துருவ நட்சத்திரம் படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு இந்த படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் என கேட்டார். நான் உடனே, நான் உருவாக்கியுள்ளேன், இது என்னுடைய கற்பனையில் உருவான படம், துருவ நட்சத்திரம் படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க யோசித்து இருக்கவே கூடாது என்று தான் நான் யோசித்தேன். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படங்களில் அவர் என்னை முழுமையாக நம்பினார். ஆனால் இந்த படத்தில் சூர்யா அப்படி என்னை நம்பவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் நான் இருந்தேன். துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தால் என்ன ஆகிவிடும்? சூர்யாவுக்கு அடுத்த பட வாய்ப்புகள் வராமல் போய்விடுமா? அவர் என்னை நம்பவில்லை. அவருக்கு காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரை அவர் நம்பவில்லை. எனக்கு ஃபேவராக கூட நான் எதுவும் கேட்கவில்லை.

உங்களுக்கு இந்த கதை பிடிக்காமல் இருக்கலாம் அல்லது புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்ன தப்பாகிவிடும்? நான் தான் தோன்றித்தனமாகவோ தலைக்கனத்துடனும் எதையும் செய்யவில்லை. நான் ஏன் இன்னும் துருவ நட்சத்திரம் படத்தில் மீது இவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் படம் கடந்த வாரத்தில் எடுத்ததைப் போல் உள்ளது. மதகஜராஜா திரைப்படம் வெளியான பிறகு எனக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்துள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தை நான் எப்படியாவது எடுத்து விட வேண்டும், பணத்திற்காக இல்லை, நான் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்பதற்காகவும் இல்லை. படத்தை உலக தரத்தில் கொடுக்க நினைத்தேன் அவ்வளவுதான். துருவ நட்சத்திரம் படத்தில் யார் வேண்டுமானாலும் பணியாற்ற முடியாது என்ற கூறி இருக்கலாம், ஆனால் சூர்யா நடிக்க மாட்டேன் என கூறியது எனக்கு வருத்தத்தை கொடுத்தது, என்ன தப்பாக போய்விடும் என்ற கௌதம் மேனன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

சர்ப்ரைஸ் விசிட்…! சசிகலாவுக்காகக் களமிறங்கிய நவரச நாயகன்…. கார்த்திக்கின் எனர்ஜியைப் பார்த்து மிரண்ட வேட்பாளர்கள்… அனல் பறக்கும் பிரச்சாரம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…

9 minutes ago

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

21 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

30 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

38 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

46 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

1 மணத்தியாலம் ago