சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் மேனன் கூறியதாவது, இதுவரைக்கும் நான் 20 படம் டைரக்ட் பண்ணி இருக்கேன். அதுல நடுநிசி நாய்கள் ஒரு படத்துல மட்டும் பாட்டே இல்லே. மீதி இருக்கிற 19 படத்துல 85 பாடல்கள்இருக்கு. இதுல ஹாரிஸ் ஜெயராஜ் மட்டும் 45 பாடல்கள் மியூசிக் பண்ணி இருக்கார்.
இந்த 85 பாட்டுல எல்லாமே முதல் டியூன்தான். ஏன்னா எந்த பாட்டுக்கும் எனக்கு இந்த டியூன் பிடிக்கலே, வேற டியூன் போடுங்கன்னு நான் கேட்டதே இல்லே. இளையராஜா சார் கூட படம் பண்ணினப்ப கூட அவரே வேற டியூன் போடலாம் என்று கேட்டார். அப்போ கூட இல்லே சார். எனக்கு முதலில் போட்ட டியூனே போதும்ன்னு சொல்லி இருக்கேன் என்று இயக்குனர் கௌதம் மேனன் அதில் கூறியிருக்கிறார்.
