கடந்த 1989ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் கரகாட்டக்காரன். ராமராஜன் கனகா காந்திமதி சண்முகசுந்தரம் சந்திரசேகர் சந்தானபாரதி கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். தமிழ் சினிமாவில் தில்லானா மோகனாம்பாள் படம் போல இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக கரகாட்டக்காரன் இருந்து வருகிறது. இப்போது பழைய மாஸ் ஹிட் படங்கள் 2ம் பாகமாக உருவாகின்றன.
அதே போல் கரகாட்டக்காரன் 2ம் பாகம் அப்படி உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கங்கை அமரன் கூறியதாவது, கரகாட்டக்காரன் 2 படம் பண்ணுவதற்கு கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை. செந்திலும் தற்போது படம் பண்ணுவதில்லை. ராமராஜனுக்கும் உருவம் மாறிவிட்டது. கனகாவும் குண்டாகி விட்டார். அதனால் இவர்களை வைத்து கரகாட்டக்காரன் 2 படம் எடுத்தால் நன்றாக இருக்காது என்று கங்கை அமரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
