திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. வெளியான புகைப்படங்கள்..

By Nanthini on புரட்டாதி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய திரைப்படம் டான்.

   

இந்த திரைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்திருந்த நிலையில் அனிருத் இசை அமைத்திருந்தார்.

   

 

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வித்தியாசமான கதை காலத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே சிபி சக்கரவர்த்தி வெற்றியை கண்டார். இவர் அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும் சிபி சக்கரவர்த்தி பெற்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சிபிச் சக்கரவர்த்திக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. வர்ஷினி என்ற பெண்ணை அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடைய திருமணத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா மற்றும் அட்லி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.