தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவருடைய இயக்கத்தில் கலந்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவ்வாறு சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ஈசன் என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. அதன்படி தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நந்தன்.

இந்தத் திரைப்படத்தை சரவணன் இயக்கியுள்ள நிலையில் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் சசிகுமார் விஜயகாந்த் மகன் குறித்து பேசி உள்ளார். அதில், குற்ற பரம்பரை நாவலை திரைப்படம் ஆகும் வாய்ப்பு தனக்கு வந்தது.

அப்போது ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்த இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் சென்று விஷயத்தை கூறினேன். அவர்களும் அப்படத்தில் விஜயகாந்த் மகனை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டனர். இந்த படத்திற்காக சண்முக பாண்டியன் நீளமாக முடியை கூட வளர்த்தார். ஆனால் இந்த திரைப்படம் எடுக்க சற்று தாமதமானதால் அவர் படைத்தலைவன் திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போது இந்த திரைப்படத்தை இயக்க திட்டமிட்டேன் ஆனால் அப்போது முடியவில்லை. சண்முக பாண்டியனை வைத்து கட்டாயம் ஒரு திரைப்படம் இயக்குவேன் என்று சசிகுமார் கூறியுள்ளார்.
