அதுக்காக மனைவியிடம் சண்டை போட்ட விஜயகுமார்.. சேரனிடம் மன்னிப்பு கேட்ட மஞ்சுளா.. நடந்தது என்ன..?

By Nanthini on கார்த்திகை 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் சேரன். நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்குள் நுழைந்த இவர் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு வெற்றி இயக்குனராக உருவெடுத்தார். இவர் கே எஸ் ரவிக்குமாருடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவருக்கும் சேரனுக்கும் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சில நேரங்களில் இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்களாம். 2000 ஆண்டு வெற்றி கொடி கட்டு என்ற திரைப்படத்தை இயக்குனர் சேரன் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய விருதுகளை பெற்றன.

Cheran Daughter Marriage: இயக்குனர் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு  பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

   

பிறகு சேரன் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இப்படியான நிலையில் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இவருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேசி உள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சேரன் பாண்டியன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. கிராமத்து கதையை மையமாகக் கொண்ட எடுக்கப்பட்ட இந்த படத்தில் சேரன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது மஞ்சுளா விஜயகுமாரின் காட்சிகள் படமாக்கப்பட்டது.

   

சேரன் கடுப்புக்கு ஆளான மஞ்சுளா விஜயகுமார்!.. விஷயம் அறிந்து விஜயகுமார் என்ன  செய்தார் தெரியுமா?..

 

காலை காட்சி என்பதால் மஞ்சுளாவும் எப்போதும் போல் தயாராகி வந்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் சேரனுக்கு ஒரே அதிர்ச்சி. விடியற்காலையில் மஞ்சள் நிற புடவையில் அவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு நிறைய பூ வைத்து ஒரு அம்மன் சிலை போல வந்துள்ளார். இதனைப் பார்த்து சேரன் இவ்வளவு மேக்கப் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் மஞ்சுளாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் இப்படி தான் நடிப்பேன் என்று கூறி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

வேறு வழி இல்லாமல் படத்தின் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு படம் வெளியாவதற்கு முன்பு படத்தை அனைவரும் அமர்ந்து பார்த்தபோது மற்ற அனைவருடன் ஒப்பிடும்போது மஞ்சுளாவுக்கு அதிக மேக்கப் இருந்துள்ளது. அதன் பிறகு சேரனிடம் சென்று நீங்கள் சொன்னது சரிதான் என்னை மன்னித்து விடுங்கள் என்று மஞ்சுளா கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட விஜயகுமாரும் அவருக்கு தெரியாதா அவர் சொன்னால் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும், உதவி இயக்குனர் என்று அலட்சியப்படுத்தக் கூடாது, அவருக்கு தெரியாதது உனக்கு தெரிந்து விடுமா என்று சத்தம் போட்டு உள்ளார். இந்த நிகழ்வை சேரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.