BREAKING: பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி…. காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்மகன் மனோஜ் மறைவுக்குப் பிறகு கடும் மன உளைச்சலில் இருந்து வந்த பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்விலிருந்து வந்தார். இதனிடையே அண்மையில் சென்னை திரும்பிய பாரதிராஜா நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.