தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனராக வலம் வருபவர் ஏ வெங்கடேஷ். சரத்குமார் நடித்த ஏய் மகாபிரபு விஜய் நடித்த பகவதி பிரசாந்த் நடித்த சாக்லேட் சிலம்பரசன் நடித்த குத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ வெங்கடேஷ். இவர் அசுரன் அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர பல படங்களில் ஏ வெங்கடேஷ் தற்போது நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சசிக்குமார் நாயகனாக நடித்த மை லார்ட் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் பாலா கலந்துக்கொண்டு பேசினார். அப்போது மேடையில் பேசிய அவர், இயக்குனர் ஏ வெங்கடேசனை தனக்கு யார் என்றே தெரியாது என்றும் அவரது படங்கள் பார்த்தது இல்லை என்றும் வெளிப்படையாக குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவில் இதுவரை 40 படங்களை இயக்கிய ஒரு இயக்குனர், நடிகர் ஏ வெங்கடேஷை யார் என்றே தனக்கு தெரியாது என்று இயக்குனர் பாலா மேடையில் சொன்னது அவரை அவமானப்படுத்தும் ஒரு இழிவான செயல் என்று இப்போது ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 4 படங்களை இயக்கிய மாரி செல்வராஜை புகழ்ந்த பாலாவுக்கு இவரை தெரியவில்லையா? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…