Categories: சினிமா

உதவி இயக்குனராக பாலாவின் உழைப்பைப் பார்த்து வியந்த தாணு… படத்தின் ஹீரோவை விட அதிக சம்பளம் கொடுத்து பாராட்டு!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் அவரிடம் இருந்து பாலா, இயக்குனர் ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி மற்றும் துரை செந்தில்குமார் போன்ற இயக்குனர்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ளனர். இந்நிலையில் பாலா சேது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வுகளை உண்டாக்கினார். அதில் பாலா தன்னுடைய சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கினார்.

பாலா இயக்குனர் பாலு மகேந்திராவிடம் வீடு படத்தில் மறுபடியும் திரைப்படம் வரை உதவி இயக்குனராக பணியாற்றினார். இதில் பாலுமகேந்திராவிடம் வேலை செய்த உதவி இயக்குனர்கள் அனைவரும் வண்ண வண்ணப் பூக்கள் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனின் போது வேறு வேறு வேலை காரணமாக சென்றுவிட்டார்களாம். பாலா மட்டுமே இருந்தாராம்.

அனைத்து வேலைகளையும் அவரும் பாலு மகேந்திராவும் மட்டுமே இழுத்துப் போட்டு செய்துள்ளார்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்த பாலா படத்தை குறித்த ரிலீஸ் தேதிக்குள் தயார் பண்ணி கொடுத்தாராம். அவரின் உழைப்பைப் பார்த்து வியந்த பாலு மகேந்திரா “முதல் முறையாக தன்னுடைய படத்தில் கோ டைரக்டர் என்ற டைட்டிலில் பாலாவின் பெயரை இடம்பெறச் செய்தாராம். அப்படி இதுவரை எந்தவொரு இயக்குனருக்கும் பாலு மகேந்திரா போட்டதில்லையாம்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு படம் முடியும் போது பாலாவுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளமாகக்கொடுத்தாராம். 90 களில் ஒரு லட்ச ரூபாய் என்பது பெரிய விஷயம். அந்த படத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கியவர் உதவி இயக்குனராக வேலை செய்த பாலாதானாம். இதை தன்னுடைய இவன்தான் பாலா புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் பாலா.

vinoth

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

37 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

42 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

48 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

53 minutes ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

56 minutes ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago