#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.
பாலு மகேந்திராவிடம் வீடு படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்த பாலா அதன் பின்னர் அவரிடம் பல படங்களில் பணியாற்றி சேது படம் மூலமாக இயக்குனர் ஆனார். குற்றப்பரம்பரை கதையை படமாக்குவது சம்மந்தமாக இயக்குனர் பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடந்தன. அப்போது ஒரு பத்திரிக்கையாளர் பாலாவிடம் பாரதிராஜா உங்களுக்கு குருநாதர் போன்றவர். அவருக்காக நீங்கள் விட்டுக்கொடுக்கலாமே” எனக் கேட்டார்.
அதற்கு பாலா ஆவேசமாக “எனக்கு ஒரே குரு பாலு மகேந்திரா அவர்கள்தான். அவருக்கு மட்டுமே அந்த ஸ்தானத்தை நான் கொடுத்திருக்கிறேன். அந்த ஸ்தானத்தை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பதற்காக நான் பல நாட்கள் பட்டினியாகக் கிடந்திருக்கேன்.” எனப் பதிலளித்தார். இதன் மூலம் வேறு யாரிடமும் நான் உதவி இயக்குனராகப் பணியாற்ற விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…