Categories: சினிமா

வசூலில் சாதனை மேல் சாதனை படைக்கும் புஷ்பா 2…. 10 நாட்களில் இத்தனை கோடியா..?

Spread the love

புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர்.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் பக்கா கமர்சியல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்த இந்திய சினிமாவை அதிர வைத்தது.

அதனைப் போலவே கே ஜி எஃப் 2, RRR, கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் 16 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தன. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்களும் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது. ஆனால் அதிரடியாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெறும் ஆறே நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் நேற்றுவரை அதாவது 10 நாட்களில் 1292 கோடி ரூபாய் வசூல் செய்துளது. இதனால் 2024ஆம் ஆண்டில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனை படைத்துள்ள படமாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago