Categories: சினிமா

உஷாரா இருங்க…! ஆட்சியை பிடிக்கணும்னா இதுதான் வழி… விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த புளூ சட்டைமாறன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இதனால் விஜய் அரசியலில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். அடுத்த 2026 ஆம் வருட தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது, துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே. விரைவில் உங்கள் கட்சியை நோக்கி ஒரு ஸ்லீப்பர் செல் ஏஜன்ட் வரவுள்ளார். அடுத்த வருடம் மேலும் சிலர் வருவார்கள். உங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் லீக் செய்யப்படும். தவறான ஆலோசனைகளை சொல்லியும் உங்களை திசை திருப்புவார்கள்‌.

படத்தில் வருவது போல.. நிஜத்திலும் அலர்ட்டாக இருந்து…இவர்களை ஆரம்பத்திலேயே களை எடுத்தால் மட்டுமே..ஆட்சியை பிடிக்க முடியும். தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு ஓடியது ஏன் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த சில மீட்டிங்கில்.. தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்த பிறகுதான்.

Soundarya

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

53 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

58 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago