தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இதனால் விஜய் அரசியலில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். அடுத்த 2026 ஆம் வருட தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது, துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே. விரைவில் உங்கள் கட்சியை நோக்கி ஒரு ஸ்லீப்பர் செல் ஏஜன்ட் வரவுள்ளார். அடுத்த வருடம் மேலும் சிலர் வருவார்கள். உங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் லீக் செய்யப்படும். தவறான ஆலோசனைகளை சொல்லியும் உங்களை திசை திருப்புவார்கள்.

படத்தில் வருவது போல.. நிஜத்திலும் அலர்ட்டாக இருந்து…இவர்களை ஆரம்பத்திலேயே களை எடுத்தால் மட்டுமே..ஆட்சியை பிடிக்க முடியும். தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு ஓடியது ஏன் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த சில மீட்டிங்கில்.. தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்த பிறகுதான்.
