#image_title
எல்லா பெண்களையும் போலவே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் நயன்தாரா. எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தவர் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு மாடலிங் செய்து வந்தார் நயன்தாரா. அதற்கு அடுத்ததாக சில மலையாளத் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார் நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான மனசிக்கரே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் அதே நேரத்தில் ஐயா மற்றும் சந்திரமுகி இரண்டு படங்களிலும் நடித்து அறிமுகமானார். நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார் இந்த விஷயத்தில் விதியை அவர்கள் மீறி விட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் வாடகை தாய் விஷயத்தில் நயன் மற்றும் விக்னேஷ் இருவரும் விதியை மீறவில்லை என்பது உறுதியானதால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு அன்னபூரணி படத்தில் நடித்தார். இப்படி இருக்க சமீப நாட்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நயன்தாரா. நயன் பற்றிய ஆவணப்படத்தில் தனுசுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று தரை குறைவாக பேசினார். இதனால் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நடிகை பத்திரிகையாளர்களை இப்படியா பேசுவது? என்ற பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
#image_title
இதற்கிடையில் விக்னேஷ் சிவன் புதுச்சேரிக்கு சென்று அரசு சொந்தமான ஹோட்டலை விலை பேசியதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை எழுந்தது. இப்படி தொடர்ந்து சர்ச்சையை சிக்கிய நயன்தாரா தற்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளாரம். அதன்படி பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தில் நயன் ஒரு பாடலுக்கு நடனமாட ஒத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா காசு வாங்காமல் ஆடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…