#image_title
ஜாகிர் உசேன் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஆவார். தபேலா வாசிக்க விரும்பும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் ஜாகிர் உசேன். 1951 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஜாகிர் உசேன் ஏழு வயது இருக்கும் போதே தபலா வாசிக்க ஆரம்பித்தார். தனது 12 வயதிலேயே பல மேடைகளை பார்த்தவர் ஜாகிர் உசேன்.
இவரது தந்தை இசைக்கலைஞர் அல்லாஹ் ரக்கா ஆவார். சிறு வயது முதலே ஜாகிர் உசேனுக்கு தாபேலா வாசிக்க கற்றுக் கொடுத்தார். சிறு வயதில் இருந்தே பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உலக புகழ்பெற்றவர் ஜாகிர் உசேன். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பிலும் தனது பங்களிப்பை அதிகமாக தந்திருக்கிறார் ஜாகிர் உசேன்.
1973 ஆம் ஆண்டு லிவிங் இந்த மெட்டீரியல் வேர்ல்ட் என்ற ஆல்பத்தில் நடித்தார் ஜாகிர் உசேன். பல தென்னிந்திய திரைப்படங்களுக்கு இசை ஆலோசகராகவும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பாளராகவும் சில படங்களில் நடித்தும் இருக்கிறார் ஜாகிர் உசேன். தமிழில் 1991 ஆம் ஆண்டு தந்துவிட்டேன் என்னை என்ற திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார் ஜாகிர் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் நடந்த சர்வதேச ஜாஸ் தினம் குளோபல் கச்சேரிக்கு ஜனாதிபதி ஒபாமாவால் அழைக்கப்பட்ட பல இசைக்கலைஞர்களில் ஜாகிர் உசேனும் ஒருவர். ஜாகிர் உசேனின் இசை சேவைக்காக பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் உயரிய விருதான கிராமிய விருதை நான்கு முறை வென்றவர் ஜாகிர் உசேன். தபேலா என்றாலே ஜாகிர் உசேன் தான் என்ற அளவுக்கு உலக பிரபலமானவர் ஜாகிர் உசேன்.
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேன் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அவருக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…