தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாலா. விக்ரம் நடித்த சேது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் 25 ஆண்டுகளாக பத்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அந்த படங்கள் அனைத்தும் தனித்துவமானவை. ஒவ்வொரு படமும் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களாக இருப்பதால் பாலாவை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று அனைவரும் கருதுகிறார்கள். தற்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்ப படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை அந்த விழாவின் போது கொண்டாடினர். இந்த விழாவில் இயக்குனர்கள் மணிரத்தினம், மாரி செல்வராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா மற்றும் சுகாசினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலு மகேந்திராவிடம் இருக்கும் மனஸ்தாபம் குறித்து பேசி உள்ளார். அதில், ஒரு தெலுங்கு திரைப்படத்தை மூன்று வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது உதவி இயக்குனர்கள் முதல் மேக்கப் மேன் வரை அனைவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க. பேட்ச் வர்க் என்பது ரொம்ப முக்கியம். அப்போ டெக்னீசியன் யாருமே இல்லாத சமயத்துல பாலு மகேந்திரா சார் உன்னால பண்ண முடியுமா என்று என்கிட்ட கேட்டாரு. எல்லா வேலையும் இழுத்து போட்டு தன்னந்தனியா ஒத்த ஆளா பண்ணி முடிச்ச.
அதுக்கு காரணம் வன்மம் தான். நான் பாலு மகேந்திரா சார்கிட்ட அசிஸ்டென்டா வேலை பார்த்த சமயத்துல ஒரு முறை நான் கொஞ்சம் லேட்டா போயிட்டேன். அப்போ அத்தனை பேரு இருக்குற செட்டில் எல்லாரு முன்னாடியும் கூட்டி சுத்தமா வச்சு கரெக்டா வேலை பார்க்கணும்னு, இந்த ரூமை ஒட்டடை அடித்து கூட்டி பெருக்குனு ஒரு மாதிரி அசிங்கப்படுத்தி பேசிட்டாரு. அன்னைக்கு நான் முடிவு பண்ண என்னைக்காவது ஒரு நாள் அவர் என்னை சார்ந்திருக்க வேண்டும் என்று. அதற்காகத்தான் அந்த தெலுங்கு படத்தில் அவர் என்கிட்ட வந்து நின்ற சமயத்தில் ஒட்டுமொத்த வேலையையும் நான் பண்ணிக் கொடுத்தேன் என பாலா பேசி உள்ளார்.