மனைவியுடன் மும்பை விமான நிலையத்தில் இயக்குனர் அட்லீ… Trip எங்க தெரியுமா..? வைரலாகும் வீடியோ…

By Begam on ஆவணி 10, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர்  இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

   

இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

   

 

இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில்  இயக்குனர் அட்லீயும் அவரது மனைவியும் கேன்ஸ் நகரில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேன்ஸ்  திரைப்பட விழாவை முடித்து விட்டு இயக்குனர் அட்லீ தனது மனைவியுடன் மும்பை ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)