Connect with us

CINEMA

80’ஸ் முன்னணி நடிகை லட்சுமியின் இரண்டாவது மகளை பாத்துருக்கீங்களா?… ஹீரோயின் போல இருக்காங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லட்சுமி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து புகழ்பெற்றவர். இந்த திரைப்படத்திற்கு முன்பு பல நூறு படங்கள் லட்சுமி நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

அதேசமயம் பிலிம்பேர் விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசு விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை 1969ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். அவரும் ஒரு நடிகை தான்.

சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ரவுடி பொம்பளை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் ஐஸ்வர்யா. தற்பொழுதும் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார். நடிகை லட்சுமி  பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக 1974ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் 1975ல் மோகன் சர்மா என்பவரை அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்தார்.

அவருடன் 5 வருட வாழ்க்கைக்கு பின் 1980ல் அவரையும் பிரிந்தார்.. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 1987ல் சிவசந்திரன் என்பவரை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகிறார். லட்சுமிக்கும் முதல் கணவர் பாஸ்கரனுக்கு பிறந்த பெண் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். அதன்பின் சிவசந்திரனுக்கும் லட்சுமிக்கும் சிவசந்திரன் சம்யுக்தா என்ற மகள் இருக்கிறார்.

பெரும்பாலும் லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா தான் என்று பலருக்கு தெரியும். தற்போது நடிகை லட்சுமியின் இரண்டாம் மகள் சிவசந்திரன் சம்யுக்தாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ அழகான இரண்டாவது மகள் இருக்காங்களா? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top