இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வச்சிட்டாரே.. ‘ஜவான்’ படத்துக்காக வெளிநாட்டில் வாகை சூடிய அட்லீ..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர்  இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார்.

   

இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியிருந்தார்.

கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் ஜவான் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்நிலையில் ஜவான் திரைப்படம் ஆஸ்ட்ரா  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இதனை அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவிக்க ரசிகர்களும் , திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதாவது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ‘ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024’ வழங்கும் அஸ்ட்ரா விருதுகளில்  சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Atlee Kumar (@atlee47)