பருத்திவீரன் படத்தால் சுப்ரமண்யபுரத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… இயக்குனர் அமீர் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஆடி 27, 2024

Spread the love

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. படத்தின் நாயகனாக ஜெய் நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய ராஜ முஹமத் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

   

   

இந்த படத்தை சசிகுமார் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பதற்கு முன்பு இயக்குனர் அமீர்தான் தயாரிப்பதாக இருந்தாராம்.அப்போது அவர் பருத்திவீரன் இறுதிகட்ட பணிகளில் இருந்துள்ளார். பருத்திவீரன் படத்தில் அமீருக்கும் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் பஞ்சாயத்து இழுத்துக் கொண்டே சென்றுள்ளது.

 

இதற்கிடையில் பாக்யராஜ் மகன் சாந்தணுவுக்கு அட்வான்ஸ் கொடுத்து, பாக்யராஜுக்குக் கதை பிடிபடாமல் அவர் தயங்கவே அவரிடம் இருந்து அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கியுள்ளனர். இதனால் நீண்ட இழுபறி ஏற்படவே தானே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படத்ததைத் தயாரிப்பது என்ற முடிவை எடுத்தாராம் இயக்குனர் சசிகுமார்.

அதன்பின்னர்தான் அந்த படத்துகுள் ஜெய் வந்தார். இன்னொரு கதாபாத்திரத்தில் சசிகுமார் தானே நடிப்பதாக முடிவு செய்துள்ளார். இப்படி தொடங்கப்பட்ட படம் 2008 ஆம் ஆண்டு ரிலீஸாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமானது.