CINEMA
கொட்டுக்காளி தியேட்டருக்கு வந்திருக்கவே கூடாது.. சிவகார்த்திகேயன் இடத்தில நான் இருந்தா இப்படி பண்ணிருக்கவே மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமீர்..!!
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் கெவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அமீர் கொட்டுக்காளி திரைப்படம் குறித்து பேசி உள்ளார். ஒரு திரைப்படம் என்பது பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். படபிடிப்பு தளத்தில் நாங்கள் அப்படி கஷ்டப்பட்டோம். இந்த வேதனைகளை அனுபவித்தோம் என்று சொல்வதால் மட்டும் அது பார்வையாளர்களை சென்றடையாது.
நாம் என்ன தாக்கத்தை அனுபவித்தோமோ அதனை திரைப்படம் கடத்தியதாக என்பதுதான் முக்கியம். வாட்ச்சாத்தி சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியும். 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். அந்த கதையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது. ரொம்ப போர் அடிக்கும். அந்த வலியை நம்மால் உணரவே முடியாது. வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால்தான் வாழை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கொட்டுக்காளி ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன படம் கிடையாது. நல்ல படம் இல்லை என நான் கூறவில்லை. பல சர்வதேச விருதுகளை பெற்ற படத்தை இங்கு வந்து வெகுஜன சினிமாவுடன் போட்டி போட வைப்பது என்னை பொறுத்தவரை வன்முறை தான். அது எனக்கு ஏற்புடையதாக இல்லை. அப்படி செய்யும் போது பல சர்வதேச விருதுகள் வென்ற இயக்குனரை இங்கே 150 ரூபாய் கொடுத்து படம் பார்த்த நபர் என்னங்க படம் எடுத்து வச்சிருக்கீங்க என்று திட்டுவதை யூடியுப் போன்ற சோசியல் மீடியா தளங்களில் பார்க்க முடிகிறது.
என்னைப் பொறுத்தவரை நான் இந்த படத்தை தயாரித்து இருந்தால் தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கவே மாட்டேன். வணிக நோக்கத்தில் படத்தை திணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர். அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஏதாவது ஒரு ஓடிடி தளத்தில் கொட்டுக்காளி படத்தை விற்பனை செய்திருக்க வேண்டும். அப்படி செய்தால் படத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் நபர்கள் மட்டும் ஓடிடி தளத்தில் சென்று பார்த்திருப்பார்கள் என அமீர் கூறியுள்ளார்.