Connect with us

மாட்டிக்கொண்ட ரோகிணி… திட்டித்தீர்த்த விஜயா… சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்…

CINEMA

மாட்டிக்கொண்ட ரோகிணி… திட்டித்தீர்த்த விஜயா… சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகிணி ஆஸ்பத்திரியில் வந்து இரண்டாவது குழந்தைக்காக செக்கப் பண்ணது பற்றி மீனா யோசித்துக் கொண்டே இருக்கிறாள். யாரிடம் கேட்பது என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனிக் காண்போம்.

மீனா யோசித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஸ்ருதி வருகிறார். என்னாச்சு மீனா என்ன ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்கிறாள். உடனே மீனா நான் ஒன்னு சொல்லுவேன் நீங்க யார்ட்டையும் சொல்லக்கூடாது அப்படின்னு சொல்லி ரோகிணி இரண்டாவது குழந்தைக்காக செக்கப் வந்தாங்க அப்படின்னு சுருதி கிட்ட சொல்கிறார். சுருதி உடனே நான் போய் கேட்கிறேன்னு சொல்கிறார். இல்ல வேண்டாம் சுருதி நீங்க கேட்காதீங்க. ஏற்கனவே போன தடவை இப்படித்தான் நான் சொல்லி கடைசில அது எனக்கே பிரச்சனையா முடிஞ்சிடுச்சு. என் விஷயத்துல தலையிடாதீங்கன்னு ரோகிணி சொல்லிட்டாங்க. தயவு செஞ்சு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் ப்ளீஸ் அப்படின்னு சொல்கிறார். சரி என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

   

   

சுருதி உடனே சும்மா இருக்காமல் போய் இந்த விஷயத்தை நேரடியா ரவி கிட்ட சொல்றாங்க. ரவி ஷாக் ஆகி இது வந்து ரொம்ப சென்சிடிவ் ஆன விஷயம். நீ என்ன இப்படி அசால்டா சொல்ற அப்படின்னு சொல்கிறார். இல்ல நான் கன்ஃபார்மா தான் சொல்றேன் அப்படின்னு சொல்கிறார் சுருதி. உனக்கு யார் சொன்னா அப்படின்னு ரவி கேக்கும்போது மீனா அக்காதான் எனக்கு சொன்னாங்க அப்படின்னு சொல்கிறார். உடனே ரவி ஷாக்காகி வெளியே போகிறான். வெளிய முத்து நிற்கிறான். முத்துகிட்ட இந்த விஷயத்தை ரவி சொல்கிறான்.

 

இந்த விஷயத்தை கேட்டு ஷாக்கான முத்து என்ன செய்யறதுன்னு தெரியாம உடனே அவங்க அப்பா கிட்ட போய் அவங்க அப்பா கிட்ட போய் இந்த விஷயத்தை சொல்கிறான். அண்ணாமலையோ யார்ரா இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் சொல்றது. இது வதந்தியா இருக்க போகுது. விஷயம் தெரியாம ஒரு பொண்ணு அப்படி நம்ம சொல்ல முடியாது அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு. இல்லப்பா இது கன்ஃபார்மா தெரியும் அப்படின்னு சொல்கிறான் முத்து.

அப்புறமா அண்ணாமலை நேரா விஜயா கிட்ட போயி விஜயா இப்படி ரோகிணி இரண்டாவது குழந்தைக்காக செக்கப்புக்கு ஆஸ்பத்திரி போயிருக்கானு எனக்கு தகவல் வந்திருக்கு. என்ன விஷயம் என்ன நடக்குது அப்படின்னு அண்ணாமலை கேக்குறாரு. விஜயா அப்படியெல்லாம் நடக்குறதுக்கு வாய்ப்பே இல்லைங்க நமக்கு தெரியாம எப்படி நடக்கும். அப்படி ரோகினி நம்ம கிட்ட மறைச்சு என்ன பண்ணிட்டு இருப்பா அப்படின்னு கோபமடைந்த விஜயா உடனே ரூமுக்கு போய் மனோஜையும் ரோகிணியும் வெளிய வரச் சொல்லி கதவை தட்டி கூப்பிடுறார். மனோஜ் வெளிய வந்து என்னம்மா ஆச்சு ஏன் இப்படி தட்டுறீங்கனு கேட்கிறான். ரோகினிய மொதல்ல கூப்பிடு அப்படின்னு கோபத்தோட கத்துகிறார் விஜயா.

ரோகிணி வெளியே வந்து என்ன ஆன்ட்டி அப்படின்னு கேட்கிறாள். அப்போ விஜயா என்ன ரோகினி நீ இதுக்கு முன்னாடி நீ கர்ப்பமாயிருக்கியா ஏதோ இரண்டாவது தடவையா நீ கர்ப்பமாக திருப்பி நீ செக்கப் போனியா என்று கத்துகிறார். உடனே போனேன்னு ரோகிணி சொல்கிறார். என்ன நடக்குது என்ன விஷயம் என்கிட்ட நீ பொய் சொல்லாத நான் சும்மா இருக்க மாட்டேன் ஒழுங்கா உண்மைய சொல்லிரு அப்படின்னு சொல்கிறார் விஜயா. ரோகிணி என்ன பண்ணனும்னு தெரியாம புதுசா ஒரு கதை காட்டுகிறாள். அப்பா ஜெயிலுக்கு போயிட்டாங்க அப்படின்னு எங்க மாமா வந்து சொன்னவுடனே நான் அதுல அழுது அழுது ஸ்ட்ரஸ் ஆகி அது கலைஞ்சு போயிடுச்சு அப்படின்னு சொல்கிறார்.

உடனே விஜயா விடாம நீ முதல் தடவை கன்சீவ் ஆனத எங்ககிட்ட சொல்லாம ஏன் மறச்ச என்கிட்ட சொல்லி இருக்கணும் இல்லனு விஜயா கேட்கிறாள். ரோகினி கலைஞ்சு போனத நான் எப்படி சொல்லுவேன்னு சொல்கிறாள். உடனே விஜயா அது மனோஜோட குழந்தைதான அப்படின்னு கேட்கிறாள். அதை கேட்டு அதிர்ச்சடைந்த ரோகினி என்ன ஆன்டி இப்படியெல்லாம் சொல்றீங்க அது மனோஜோட குழந்தை தான்ன்னு சொல்கிறாள். அடுத்ததா குழந்தை பெத்துக்கலாம்னு தான் செக்கப் போனேன்னு சொல்கிறாள் அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top