தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் அமீர். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்தார். பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மௌனம் பேசியதே வெற்றியை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ராம் என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன். அமீர் மற்றும் நடிகர் கார்த்தி இருவருக்குமே மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நல்ல வசூலையும் பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தை ஷவர் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருத்திவீரன் திரைப்படத்தில் அமீர் பொய் கணக்கு காட்டியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் பருத்திவீரன் படம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது அமீர் தன்னுடைய சொந்த பணத்தை வைத்து தான் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்படியான நிலையில் அமீர் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பருத்திவீரன் படத்துக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய வலி இருக்கிறது. பருத்திவீரனின் திரைக்கதை புத்தகம் வெளிவந்த போது அதன் முன்னுரையில் இந்த திரைப்படத்தை நான் எடுத்திருக்கவே கூடாது என்று குறிப்பிட்டுள்ளேன்.

இந்த படம் எனக்கு அங்கீகாரம் மற்றும் அடையாளத்தை கொடுத்தாலும் ஒரு மனிதனாய் எனக்கு எந்த சந்தோசத்தையும் தரவில்லை, வலிகளை மட்டும் தான் தந்தது என்று சொல்ல வேண்டும். அந்த வழிகளைப் பற்றி கூறினால் அதற்கு காரணமானவர்களை பற்றி கூற வேண்டும். அவர்களின் பின்புலத்தை கூற வேண்டும். அதனால் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் அமீர் பேசி உள்ளார்.
