இன்று 30 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்.. முதல் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா..?

By Nanthini on கார்த்திகை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவக்கார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். மறைந்த மேயர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூலிலும் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது 300 கோடி வசூலித்து புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

Amaran: 'சிவகார்த்திகேயன் பிடித்திருக்கும் துப்பாக்கி அவரின் உழைப்புக்கான  பரிசு!' - Rise Of SK | Rise Of Sivakarthikeyan - Vikatan

   

தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நிலவரம் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வளவு பெரிய உச்சத்திற்கு உண்மையில் சூர்யா மற்றும் சிம்பு எல்லாம் வெகு வருடங்கள் காத்திருந்து பெற்ற உயரத்தை வெகு சீக்கிரமாகவே பெற்று விட்டார். ஆனால் அதற்கு முன்னரே தொலைக்காட்சி மூலம் மிகவும் வளமான அஸ்திவாரத்தை வெகு வருடங்களாக போட்டு வைத்து விட்டார் என்பதே நிஜம். அதனால்தான் மக்களும் வெகு சீக்கிரமாக சிவகார்த்திகேயனை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

   

Sivakarthikeyan Box Office Hits : 50 கோடி முதல்; 300 கோடி வரை -  சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக்கிய டாப் 4 படங்கள்!

 

தற்போது இறுதியாக நடித்த அமரன் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் முதல் சம்பளம் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முதன் முதலாக மெரினா திரைப்படம் மூலமாக தான் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் அவர் 25 நாட்கள் நடித்த நிலையில் அந்த படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் அவருக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளார்.

Sivakarthikeyan's Marina turns ten: Interesting facts about the film

இதனை சிவகார்த்திகேயன் ஒரு விழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவரது சம்பளம் முன்னணி நடிகர்களை மிரள வைக்கிறது என்பதே நிஜம். அவருடைய படங்கள் எப்படியும் ஹிட் அடித்து விடும் என்ற அஸ்திவாரத்தை போட்டு விட்டார். ரஜினி மற்றும் விஜய்யை போல குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மிகவும் கவர்ந்து விட்டார். இன்று 30 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் முதல் படத்திற்கு 10,000 ரூபாய் சம்பளம் வாங்கியதாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.