என்னோட படத்துக்கு டாப் ஹீரோ தேவையில்லை.. காதல் கோட்டையில் அஜித்தை நடிக்க வைக்க காரணம் இதுதான்… இயக்குனர் அகத்தியன் ஓபன் டாக்..!

By Nanthini on மாசி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு இயக்குனர் திரைக்கதை மற்றும் இயக்கத்துக்காக தேசிய விருது வாங்கியது காதல் கோட்டை படத்துக்காக இயக்குனர் அகத்தியன் தான். தமிழ் சினிமாவில் 90 கள் முழுக்க காதல் கதைகளுக்கான காலமாக அமைந்தது. இவருக்கு  கனி, விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குனர் திரு என்பவரையும், இரண்டாவது மகளான விஜயலஷ்மி இயக்குனர் ஃபெரோஸ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவருடைய மூன்றாவது மகளான நிரஞ்சனிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடைற்றது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இயக்குனர் அகத்தியனின் 3 மருமகன்களுமே இயக்குனர்கள் என்பது ஒரு ஆச்சரியமான ஒற்றுமையாக கோலிவுட்டில் பார்க்கப்பட்டு வருகிறது.

Agathiyan - Wikipedia

   

இந்நிலையில் இயக்குனர் அகத்தியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் அஜித்தின் காதல் கோட்டை திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் முதன் முதலில் காதல் கோட்டை திரைப்படத்தை எடுத்துட்டு போய் சொன்ன சமயத்தில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் நீ ரொம்ப பிரம்மாண்டமாய் இருக்க கதையெல்லாம் எனக்கு சொல்ல வேண்டாம் வான்மதி மாதிரி சாதாரணமா இருக்க ஒரு கதையை சொல்லு அது போதும் என்று சொன்னாரு. இந்த கதையை எல்லா ஹீரோ கிட்ட சொன்ன போதும் இதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா என்ற ரியாக்சன் தான் இருந்துச்சு. நான் பெரும்பாலும் ஹீரோ கிட்ட கதையே சொல்ல மாட்டேன். என்ன பொறுத்த வரைக்கும் என்னோட படம் ஹிட் ஆக பெரிய ஹீரோ யாரும் தேவைப்பட மாட்டாங்க.

   

Kadhal Kottai: "2கே கிட்ஸும் கொண்டாடுவதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய  வெற்றி!" - அகத்தியன் பேட்டி |Kadhal lotta movie director agathiyan  interview - Vikatan

 

என்னோட கதைக்கு ஒரு ஹீரோ இருந்தா போதும் என்ற எண்ணத்தில் தான் நான் கதையை எழுதுவேன். சிவசக்தி பாண்டியன் சார் இந்த கதையை கேட்டுட்டு இதுக்கு கட்டாயம் உனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும் மூன்று தலைமுறைக்கு எனக்கும் லாபம் கிடைக்கும் எல்லாரும் கொண்டாடுவாங்க என்று சொன்னாரு. அதே மாதிரி தான் நடந்துச்சு. காதல் கோட்டை படத்துல அஜித்தை நடிக்க வைக்க முக்கிய காரணம் அந்த சமயத்துல எல்லா பெண்களுக்கும் பிடிச்ச ஹீரோவா அவர் இருந்தாரு. ரொம்ப அழகான நேர்த்தியான குணம் கொண்டவர். அவர்கிட்ட கதையை சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னாரு நாங்களும் பண்ணோம் அவ்வளவுதான் என்று காதல் கோட்டை திரைப்படம் குறித்து அகத்தியன் பேசியுள்ளார்.