விடாமுயற்சிக்கு 2 ஹாலிவுட் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த மகிழ் திருமேனி… தேடிப்பிடித்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

By Nanthini on மாசி 6, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

அஜித்துக்கு நன்றி தெரிவித்த 'விடாமுயற்சி' படக்குழு- Vidaamuyarchi movie  update

   

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது.

   

விடாமுயற்சி'- சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி- Government approves special  screening of 'Vidaamuyarchi'

 

தமிழகத்தில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்று காலை முதலே திரையரங்குகள் அனைத்தும் விழா கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் காட்சி முடிந்ததும் அப்படத்தின் கதை என்ன என்பது தெரிய வந்துள்ளது.

article_image4

முன்னதாகவே இது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை மட்டும் தழுவி எடுக்கப்பட்டு இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மற்றொரு ஹாலிவுட் படத்தையும் இதில் காப்பியடித்துள்ளனர். அந்தப் படம் தான் லாஸ்ட் சீன் அலைவ். இந்த இரண்டு படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து தான் விடாமுயற்சியை மகில் திருமேனி இயக்கியுள்ளார். பிரேக் டவுன் பட குடுவை போல் லாஸ்ட் சீன் அலைவ் படக்குழுவும் பிரச்சனை செய்தால் விடாமுயற்சி படத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.