“யாருமே என்னை ஏலத்தில் எடுக்கல… கைகொடுத்த லக்னோவை மறக்க மாட்டேன்… நன்றிக்கடன் தீர்க்கும் திக்வேஷ் ரதி..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதி தனது அணி மீதான நன்றியுணர்வையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலங்களில் எந்த அணியும் தன்னைத் தேர்வு செய்ய முன்வராத நிலையில், 2025 ஏலத்தில் லக்னோ அணி தனக்கு வாய்ப்பளித்ததை அவர் நினைவுகூர்ந்தார். தனது கடினமான காலக்கட்டத்தில் தனக்குத் துணையாக நின்ற அணியை விட்டு விலக மாட்டேன் என்றும், தனது நல்ல நாட்களிலும் அதே அணியுடன் இருக்கவே விரும்புவதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தனது ஒப்பந்தத் தொகை ரூ. 30 லட்சமாக இருந்தாலும், அதிக பணத்திற்காக மீண்டும் ஏலத்திற்குச் செல்ல தனக்கு விருப்பமில்லை என்று திக்வேஷ் ரதி தெளிவுபடுத்தியுள்ளார். நன்றியுணர்வோடு லக்னோ அணிக்காக விளையாடுவதே தனது நோக்கம் என்றும், பணத்தை விட அணியின் நம்பிக்கையே முக்கியம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.