“காங்கிரஸுடன் லடாய்… தவெக MLA-க்கள் கடுப்பு”…. CTR நிர்மல் குமாருக்கு செக் வைக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழ் பேரவை நாயகன் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நிகழ்வில்கூட, இருவரும் ஒருவருக்கொருவர் சம்பிரதாயத்திற்காக மட்டுமே வணக்கம் தெரிவித்துவிட்டு விலகிச் சென்ற காட்சி இந்த விரிசலை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்திருந்தது. ஏற்கெனவே மதுரை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நிர்மல் குமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் மோதல் போக்கைப்போக்குவதாகவும், கட்சிக்குள் அவர்களுக்கு இடையே இணக்கமான சூழல் இல்லை என்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்களுடனும் அல்லது மூத்த தலைவர்களுடனும் இதுபோன்ற வீண் லடாய்களை வளர்த்துக் கொள்வது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தவெக உடன்பிறப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த மனவேதனையுடன் புலம்பி வருகின்றனர்.