விடிஞ்சா திருமணம்… ஆசை ஆசையாய் காதலனை மணக்க இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒட்டுமொத்த ஊரையும் கலங்க வைத்த சம்பவம்…!

Spread the love

திருவனந்தபுரத்தில் நீண்ட காலமாகக் காதலித்து வந்த இளம்பெண்ணை கரம் பிடிக்க இருந்த தருணத்தில், இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்பழந்தி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ராகேஷ் என்பவரும், காட்டாயிகோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக உயிருக்குயிராகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தங்களது காதலைத் திருமணத்தின் மூலம் உறுதிப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அதிகாலை கோவிலில் திருமணம் செய்துகொண்டு, பின்னர் வாடகை வீட்டில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. தனது திருமண வேலைகளுக்காக அதிகாலையிலேயே மோட்டார் சைக்கிளில் ராகேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கேரள அரசு மின்சாரப் பேருந்து ராகேஷின் பைக் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மணக்கோலம் காண வேண்டிய நேரத்தில், மணமகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு உறவினர்களும், அவரது காதலியும் நிலைகுலைந்து போயுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய திருமண நாள், ஒரு கண நேர விபத்தால் மரண ஓலமாக மாறியது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago