உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கியில் சட்டவிரோத கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவருடைய மருமகனும் youtube வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த முனிஷ்ரா ராவத் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஸ்ரீ தாமோதர் ஔஷதாலயா என்ற கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு கிளினிக் நடத்துனர் கியான் பிரகாஷ் மிஸ்ரா அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறி 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது மிஸ்ரா மது போதையில் இருந்ததாகவும் youtube வீடியோ பார்த்துவிட்டு சிகிச்சையை தொடங்கியதாகவும் பெண்ணின் கணவர் புகார் கூறுகின்றார். மிஸ்ரா ஆழமான கீறலை ஏற்படுத்திய ரத்த நாளங்களை வெட்டியதால் அந்தப் பெண் அடுத்த நாளே உயிரிழந்துள்ளார். அவருக்கு உதவிய மருமகன் விவேக்குமார் மிஸ்ரா அரசு மருத்துவமனையில் ஊழியராக உள்ளார். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கிளீனிங் சீல் வைக்கப்பட்டதுடன் அலட்சியமாக மரணம் ஏற்படுத்திய அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
