“பாரதிராஜா இறுதிச்சடங்கில் பரபரப்பு: சொத்துக்காக மருமகளை துரத்தினாரா மகள் ஜனனி…? தயாரிப்பாளர் உடைத்த அதிர்ச்சி உண்மை…!!”

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) சமீபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தனது மகன் மனோஜின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சூழலில், அவரது இறுதிச் சடங்கின் போது குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, இயக்குநர் கங்கை அமரன் அவரது மனைவியிடம் சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இறுதிச் சடங்கின் போது பாரதிராஜாவின் மகள் ஜனனி, மனோஜின் மனைவி நந்தனாவை அங்கிருந்து வெளியேறும்படி கூறியதாகவும், மனோஜின் மகள்களைக் கூட சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாயின; பின்னர் நடிகை ராதிகா தலையிட்டே இந்த நிலைமையைச் சுமூகமாக்கியதாகத் தெரிகிறது. முன்னதாக, நந்தனாவை வீட்டை விட்டு காலி செய்யக் கோரி ஜனனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

   

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, பாரதிராஜாவுக்கு சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாரதிராஜா மலேசியாவில் இருந்தபோது அவரது சொத்துக்களை ஜனனி தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டதாகக் கூறப்படுவதாகவும், மகன் மனோஜின் மறைவுக்குப் பிறகு கேராளாவைச் சேர்ந்த அவரது மனைவி நந்தனாவுக்குச் சொத்துக்கள் செல்வதை ஜனனி விரும்பவில்லை என்பதே இந்த மோதல்களுக்குக் காரணம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.