கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம்… ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா கங்கனா ரணாவத்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Spread the love

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், தற்போது இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராகவும் வலம் வருபவர் கங்கனா ரனாவத். தமிழில் ‘தாம் தூம்’, ‘தலைவி’, ‘சந்திரமுகி 2’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான இவர், எப்போதுமே தனது துணிச்சலான கருத்துக்களுக்காகவும் சர்ச்சைகளுக்காகவும் செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி மற்றும் கையில் வளையல்களுடன் கங்கனா இருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியStyleயுள்ளது.

இந்த புகைப்படங்களைப் பார்த்த சமூக வலைதளவாசிகள் மற்றும் ரசிகர்கள் பலரும், கங்கனா ரனாவத் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா என்று கேள்வி எழுப்பி விவாதங்களை கிளப்பியுள்ளனர். அதே நேரத்தில், இது நிஜத் திருமணம் அல்ல என்றும், அவரது அடுத்த திரைப்படத்திற்கான கதாபாத்திரத்தின் தோற்றமாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அவரது சூப்பர் ஹிட் படமான ‘குயின்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (Queen 2) படப்பிடிப்புத் தோற்றமாக இது இருக்கலாம் என நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர்.

திரைத்துறை மற்றும் அரசியல் என இரண்டிலும் பிஸியாக இருக்கும் கங்கனா, இந்த ரகசிய திருமண வதந்திகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இந்த வைரல் புகைப்படம் குறித்த உண்மையை உடைப்பாரா அல்லது இது புதிய படத்திற்கான புரோமோஷனா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Swetha

Recent Posts

நீயெல்லாம் மனுசனா…? “ஹனிமூன் வந்த இடத்தில் மாதவிடாய்…” மனைவியை உதைத்து கொலை செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை… 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை…. பகீர் சம்பவம்…!!

கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…

8 minutes ago

இளைஞனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..! சுவரில் மறைக்கப்பட்டிருந்த மர்மப் பை… திறந்து பார்த்ததும் உறைந்துபோன போலீஸ்…!!

பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.…

9 minutes ago

யார்கிட்ட வேலையை காட்டுற…? உதவி செய்ய நினைத்த ரஷ்ய பெண்ணுக்கு ஷாக்… டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்… போட்டு தாக்கிய பிரபலம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…

21 minutes ago

ஒரு சொட்டு தண்ணி இல்ல…! ஏம்மா.. சாப்பிடறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலையா…? ஸ்கேனில் கொழுக்கட்டை சைஸ் கற்கள்…. டாக்டர்களையே அலறவிட்ட தைவான் பெண் ….!!

தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…

33 minutes ago

BREAKING: கொந்தளித்த உதயநிதி…. சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேறிய திமுக…. சற்றுமுன் பரபரப்பு….!

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…

55 minutes ago

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

1 மணத்தியாலம் ago