Categories: சினிமா

உங்களை Disappoint பண்ணுனதுக்கு Sorry… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தர்ஷிகா வெளியிட்ட பதிவு..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் போட்டியாளர் சத்யா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நடிகை தர்ஷிகா வெளியேறியுள்ளார். இவர் வீட்டிற்குள் விஷாலிடம் அதிகமான அன்போடு இருந்து வந்தார். அவர் மேல் இவருக்கு காதல் இருந்தது ஆனால் அதை வெளியில் சொல்லாமல் ஒரு மாதிரியாகவே இருந்து வந்தார். இருவரும் ஒருவொருக்கொருவர் மாறி மாறி ஊட்டிவிடுவது என இருந்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தர்ஷிகா முதல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் என்னுடைய குடும்பங்களே.. நீங்கள் என் மேல் காட்டிய அன்பிற்கு என்னால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியல. ஆனால் ஒரு கட்டத்தில் உங்கள் அனைவரையும் disappoint செய்ததற்கு மன்னிக்கவும். ஆனால் எந்த ஒரு இடத்திலும் நான் fake ஆக விளையாடவில்லை. என்னுடைய உணர்ச்சிகளும், விளையாட்டும் நேர்மையாக இருந்தது. நான் சரியாக விளையாடி வந்தேன். இதுதான் உங்களின் தர்ஷி என்றுபதிவிட்டுள்ளார் .

Soundarya

Recent Posts

அய்யய்யோ… டிராக்டர் வருது ஓடுங்க… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நொடியில் நடந்த கொடூரம்… சிறுமி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…

15 minutes ago

அட கொடுமையே… நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து… வாலிபர் பரிதாப பலி… புனே நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்…!

புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…

22 minutes ago

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

33 minutes ago

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago