Connect with us

CINEMA

‘நான் ஜெயிலர் படம் பாக்காததுக்கு காரணம் இந்த லிட்டில் சூப்பர் ஸ்டார் தான்’… மருத்துவமனையிலிருந்து வேடிக்கையாக பதிவு வெளியிட்ட தனுஷின் அக்கா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

   

 

திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி. இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் நடிகர் தனுஷின் அக்காவான டாக்டர் கார்த்திகா தேவி திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் ஒரு பிரசவத்தை பார்க்க சென்றுள்ளார். தற்பொழுது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இந்த லிட்டில் சூப்பர் ஸ்டாரால் தான் நான் ஜெயிலர் படம் பார்க்க முடியவில்லை என்று புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்….

Continue Reading

More in CINEMA

To Top