தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்குனராகவும் நடிகராகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனுஷ் இதுவரை இரண்டு படங்களை இயக்கி இருந்த நிலையில் முதல் படமான பா. பாண்டியும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
![]()
அதைத் தொடர்ந்து கடந்த வாரம் தனுஷ் நடித்து இயக்கியுள்ள இரண்டாவது படமான ராயன் படம் இந்தியாவில் பழமொழி திரையரங்குகளில் வெளியானது. ராயன் படமும் பல விமர்சனங்களை தாண்டியும் மக்களை அதிகமாக கவர்ந்து உள்ளது.

இப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 102 கோடியை வசூல் செய்துள்ளது. படம் வெளிவந்து 7 நாட்களையே கடந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 52 கோடியை வாரி குவித்துள்ளது. இந்த வசூல் சாதனை தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
