தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் இயக்குனர் பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ரஜினி 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கினார். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இது வெற்றி படமாக அமைந்ததற்கு அனிருத்தின் இசை மற்றும் பின்னணி பாடல்கள் முக்கிய காரணம்.
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இதனையடுத்து தனுஷ் நடிக்கும் 52வது படமான இட்லி கடை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்குவதாகவும், அருண்விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இட்லி கடை ஏப்ரல் 10 ஆம் தேதி தனியாக வெளியாகி கலக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், இப்பொது அந்த படத்திற்கு போட்டியாக சூர்யா 44 வருவதாக கூறப்படுகிறது. அதாவது அதே நாளில் இந்த படம் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. தனுஷ் படமும் சூர்யா படமும் ஒரே நாளில் வெளியாகிறது .