2K கிட்ஸையே தூக்கி சாப்பிட்ட தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி! லிவ்-இன் உறவை விட அட்வான்ஸாக செயல்பட்ட ரஜினியின் மகள்? பத்திரிக்கையாளர் பகிர்ந்த பகீர் தகவல்!!

By Arun on சித்திரை 13, 2024

Spread the love

தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண்மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருமே பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடியின் விவாகரத்து குறித்தான பேச்சுக்களே நிரம்பி வழிகின்றன.

   

   

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த ஒரு பகீர் தகவலை கூறியுள்ளார்.

 

அதாவது தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி பிரிந்து வாழ்வதாக அவர்கள் அறிவித்திருந்தாலும் அவர்களது மகன்கள் இரண்டு பேரிடமே மிக சுதந்திரமாக இரண்டு பேரின் வீட்டிலேயே வளர்கிறார்கள் எனவும் இதுவரை தனுஷ் வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரின் பெயரிலேயே வாங்கியிருக்கிறார், இப்போது அதில் எந்த பிரச்சனையும் வரவில்லை, இருவரும் நினைத்தபோதெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்றும் கூறிய அந்தணன்,

“2K கிட்ஸ்களின் உலகத்தில் பாய் பெஸ்டி, சிச்சுவேஷன்சிப் போன்ற உறவுகள் வழக்கத்தில் இருக்கின்றன. அது போலவே தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி சிச்சுவேஷன்சிப் போன்ற உறவில் இருப்பதாக தெரிகிறது. ‘உன்னுடைய சுதந்திரத்தை நான் பறிக்கமாட்டேன், என்னுடைய சுதந்திரத்தை நீ பறிக்காதே, உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ விலகிவிடலாம், எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விலகிவிடுவேன்’ என்பது போன்ற உறவில்தான் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் இருக்கின்றனர்” என்று அந்தணன் அந்த வீடியோவில் பகிர்ந்திருந்த கருத்து குறிப்பிடத்தக்கது.