இந்த ஐடியா சூப்பரா இருக்கே…! ஒற்றை கையால் கழிவுகளை சுமந்து வந்த மாற்றுத்திறனாளி… கேதர்நாத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலத்தில் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதர்நாத் புனிதத் தலத்திற்குச் செல்லும் பக்தர்கள், ஆன்மீகப் பயணத்துடன் சேர்த்துச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். கௌரிகுண்டில் இருந்து கேதர்நாத் செல்லும் 18 கி.மீ தொலைவிலான கரடுமுரடான பாதையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நோக்கில், உள்ளாட்சி நிர்வாகம் ‘கேரி மீ பேக்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து, 12 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஒற்றைக் கையை இழந்த மதன் லால் என்ற பக்தர் தனது ஆரோக்கியமான கையால் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமந்து வந்ததும், குர்கானைச் சேர்ந்த அங்கிதா சிங் என்ற பெண் தனது நண்பர்களுடன் இணைந்து 8 கிலோ கழிவுகளைச் சேகரித்து வந்ததும் அங்குள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் சைக்கிள்களில் கழிவுகளைச் சுமந்து வந்து இந்த உன்னதமான தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.