மத்திய பிரதேச மாநிலம் பார்வானி பகுதியில் உள்ள குடியிருப்புச் சாலையில், தெருநாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் உடலைக் கவ்விச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் உடனடியாக நாயைத் விரட்டி, சிசுவின் உடலை மீட்டு போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குறைப்பிரசவத்தில் சிசு பிறந்துள்ளதும், அதனை அக்குடும்பத்தினர் சாக்கடை அருகே குழிதோண்டி புதைத்ததும் தெரியவந்தது. புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தெருநாய் அதைத் தோண்டி எடுத்து வந்துள்ளது என்பதைப் போலிஸார் உறுதிசெய்து, மேல் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
