90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் தேவயானி ஹீரோயினாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.

#image_title
திருமணமான பிறகு தேவயானி பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் 6 வருடம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும், கொடி முல்லை உள்ளிட்ட சீரியல்களில் தேவயானி நடித்தார். இப்போதும் அவர் சீரியலில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் ராஜகுமாரனுக்கு அதன் பிறகு இயக்குனராகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். இப்போது தேவயானியின் இரண்டு மகள்களும் வளர்ந்து இப்போது பதின் பருவத்தை எட்டியுள்ளனர். இணையத்தில் தேவயானி தன் மகள்களோடு இருக்கும் புகைப்படம் கவனம் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தேவயானி மூத்த மகள் இனியா, “சினிமாவிற்கு வரணும் ஆசை இருக்கு. நடிப்பிலயும் ஆர்வம் இருக்கிறது.

ஆனால் அதைவிட கேமரா ஒர்க் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பா மாதிரி டைரக்ஷன் ரொம்ப பிடிக்கும். நிறைய படங்கள் பார்ப்பேன். ஆனா தேவயானி, ராஜகுமாரன் பொண்ணு என்றால் ஒரு எக்ஸ்படேசன் இருக்கும். அதை சந்திப்பது தான் எனக்கு சிரமம் என்று நினைக்கிறேன். அதை நினைத்து தான் பயமாயிருக்கும். போக போக கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
