தமிழகத்தில் தற்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களம் என்பது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவே உள்ளது. அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் அரசியலில் நுழைவது என்பது சாதாரணம்தான். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கு வந்த அரசியல் வாய்ப்புகளை உதறித் தள்ளியுள்ளனர். அ
ப்படி ஒரு சம்பவம் தான் நடிகை தேவயானி வாழ்க்கையிலும் நடந்துள்ளது. அதாவது தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அந்தப் பேட்டியில், மக்கள் நீதி மய்யம் தேவயானியை அந்தியூர் தொகுதியில் தேர்தலில் நிறுத்துவதற்காக முயற்சி மேற்கொண்டது. ஆனால் எங்களுக்கு அரசியல் தெரியும் என்பதால் அதை நாங்கள் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தலில் நின்று வெல்வதைவிட, ஆளும் கட்சி எம்எல்ஏவாக வெல்ல வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான விஷயங்களை செய்ய முடியும். நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.
ஒருமுறை அந்தியூரில் வைத்து கமல்ஹாசன் எங்களை சந்திக்க வருவதாகவும் எங்கள் வீட்டில் தான் உணவு அருந்த போகிறார் என்றும் கூறினார்கள். ஆனால் நாங்கள், சார் சென்னைக்கு கிளம்பி விட்டோம், சாவியை கொடுத்துவிட்டு செல்கிறோம், எங்கள் வீட்டிற்கு வந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டோம். அரசியல் நிமித்தமாக அவர் எங்களை சந்திப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைமை தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கும் வரும். அந்தக் கட்சியினர் ஒருவேளை எங்களை அழைத்தால் தலைகீழாக நின்றாலும் நாங்கள் போக மாட்டோம் என்று ராஜகுமாரன் பேசியுள்ள கருத்து தற்போது அதிவேகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…