அடேங்கப்பா..! 20 முறை எடுக்கப்பட்ட ஒரே படத்தின் கதை…. இந்திய சினிமாவின் கிளாசிக் Movie இதுதான்..!

By Soundarya on தை 31, 2025

Spread the love

காதல் காவியங்களில் வரிசையில் பல படங்கள் இருந்தாலும் தேவதாஸ் படத்திற்கு தான் முதலிடம். காதல் தோல்விக்காக தாடியை அடையாளம் காட்டிய படமும் இதுதான். இந்த படத்தில் தேவதாஸ் – பார்வதி காதலர்களாக நடித்திருப்பார்கள். 50 களில் வெளியான இந்த படம் இன்று வரை காதலின் அடையாளமாகவே இருக்கிறது. இந்த படம் ஒரு சோக கதை. ஜமீன் வீட்டு மகன் தேவதாசுக்கும் ஏழை பார்வதிக்கும் காதல். இவர்கள் திருமணம் குறித்து பார்வதியின் பாட்டி ஜமீன்தாரிடம் பேச மறுத்து விடுகிறார்.

   

அதனால் பார்வதி வயதான ஜமீன்தார்க்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவர் தந்தை தேவதாஸ் தாடி வளர்த்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார் என்பதுதான் கதை.  முதலில் இந்த படத்தை வினோதயா பிக்சர்ஸ் நிறுவனம் நாகேஸ்வரராவ், சௌகர் ஜானகி நடிப்பில் தான் தொடங்கியது.  ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் இவ்வளவு சோகம் கொண்ட இந்த படம் வெற்றி பெறாது என்று விட்டுவிட்டு சாந்தி என்ற படத்தை தயாரித்தார்களாம்.

   

 

அது தோல்வியில் முடிந்தது. இந்த படத்தின் பாட்னர்களில் ஒருவரான  டி.எல் நாராயணா நிறுத்தப்பட்ட தேவதாஸ் படத்தை மீண்டும் தொடங்கினார். இப்போது சௌகாருக்கு பதிலாக சாவித்திரி,எஸ்.வி.ரங்காராவ், ஆஞ்சநேயலு  உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே வரவேற்ப்பட்டது.  இந்த படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

காதல் சோகக் காட்சிகளை நிஜம் என்றே நம்பி கவலை கொண்டு அழுதார்கள். இந்த படத்திற்கு பிறகு நாகேஸ்வரராவ் சாவித்திரி புகழ் ஏறியது என்று சொல்லலாம். 1929ல் மௌன படமாக இந்த கதையை உருவாக்கினார்கள். கொல்கத்தாவை சேர்ந்த நரேஷ் சந்திர மிஸ்ரா என்பவர். 1935 ஆம் ஆண்டு பிரமதேஷ் சந்திரா என்பவர் பேசும் படமாக வங்க மொழியில் உருவாக்கினார். அப்போதிலிருந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், உருது உட்பட பழமொழிகளில் உருவாகி இருக்கிறது இந்த கதை. அதாவது இந்த ஒரே கதை 20 முறை திரைப்படம் ஆகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.  1953 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இப்படம் 3 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 11-ம் தேதி தமிழில் வெளியானது