Music director Deva

உங்க முகத்தை பார்க்க மாட்டேன்… நீங்க என்னை ஏமாத்திடுவீங்க… – தேனிசை தென்றல் தேவாவிடம் நேரடியாக சொன்ன பிரபல இயக்குனர்!

By Elango on மாசி 15, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். அவர் இயக்கிய அவ்வை சண்முகி நட்புக்காக ஆகிய 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இந்த படங்களின் பாடல்கள் இன்றும் பெரிய அளவில் ரசிக்கப்படுகின்றன. இந்த படங்களின் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தேனிசைத் தென்றல் தேவா கூறியதாவது, நான் நட்புக்காக படத்துல மீசைக்கார நண்பா பாட்டு கம்போஸ் பண்ணும் போது கேஎஸ் ரவிக்குமார் என்னோட முகத்தை பார்க்க மாட்டார். கீழே குனிஞ்சுகிட்டே தான் பாட்டை கேப்பார். சார் என்னை பார்த்து பாட்டு கேளுங்க சார் என்று சொன்னார். இல்லே சார். நீங்க உங்க முகத்துல பாட்டுக்கு உண்டான ரியாக்சன் கொடுத்து என்னை ஏமாத்திடுவீங்க. அதனாலதான் பார்க்காமலேயே கேட்கிறேன் என்று அவர் சொன்னார் என்று தேவா கூறியிருக்கிறார்.